professional courier
  a
மாதாந்திர அறிக்கைஆம்புலன்ஸ்
அவசர மருத்துவ உதவி ஊர்தி்

ஆம்புலன்ஸ் சேவை நமதூர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கடந்த 5 வருடங்களாக அந்தச் சேவை தொடர்கிறது. கடற்கரைத்தெருவில் நடந்த திருக்குஆன் மாநாட்டின் போது ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாதி, சமய பாகுபாடின்றி அனைத்து சமுதாய மக்களுக்கும் இது சேவை செய்கிறது. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறது.

இன்று நம்மிடம் இருக்கும் ஆம்புலன்ஸ் நல்ல முறையில் செயல்படுகிறது. ஆனால் அவசரமாக, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒருவரை ஆக்ஸிஜன் சிலிண்டருடன், முதல் உதவி செய்யும் நர்சுடன், ஓரிரு உறவினருடன் எடுத்துச்செல்ல முடியாத நிலையில் உள்ள ஒரு சிறிய வண்டிதான். ஒரு பெரிய டீசல் வண்டி இருந்தால், நமதூர் சகோதரர்கள் வாங்கி அதிரை பைத்துல்மாலிடம் பொறுப்பை சாட்டினால் குறைந்த, இன்னும் சிறப்பான சேவை செய்ய முடியும், இன்ஷா அல்லாஹ்.

மேலும் தற்பொழுது டிரைவர் சம்பளம் ரூ.1750, வருமானத்தில் ரூ.100-க்கு 10% பேட்டா வழங்கப்படுகிறது. பராமரிப்புச் செலவு, பெட்ரோல் செலவு, FC போன்றவை இருக்கின்றன. அதற்காக குறிப்பிட்ட கட்டணங்களை வாங்க வேண்டியுள்ளது. மிகவும் ஏழைக்கும், அநாதைகளுக்கும் இலவச சேவை செய்யப்படுகிறது.

நமதூர் முஹல்லாக்கள் சேர்ந்து அல்லது நமதூர் சகோதரர்கள் இணைந்து, ஆம்புலன்ஸ் சேவைக்கான செலவினங்களை (உள்ளூரில் வீட்டுக்கும் மையவாடிக்கும், மருத்துவமனைக்கும் நோயாளிகளை அவசர மருத்துவ உதவிக்கொண்டு செல்லும் செலவினங்களை) ஏற்றுக்கொண்டால், உள்ளூர் சேவையை இலவசமாக ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமால் அளிக்கலாம். இதுபற்றி சிந்திக்கவும்.

Advt. here
©2005 adiraibaithulmal.com. All Rights Reserved.
Hosted by Adirai Baithulmal, Developed by A.H. Mohamed Saleem & T. Ahamed Hamza