professional courier
  a
மாதாந்திர அறிக்கைஆம்புலன்ஸ்            
கல்வி உதவித்தொகை
கல்வியை பெறுவது அடிப்படை உரிமை. கல்வியை தருவது சமுதாய கடமை. நல்ல கல்வி நிறுவனங்களை உருவாக்கி, நிர்வகித்து கல்வியை வழங்குவது. இல்லையென்றால், கல்வி அறக்கட்டளை ஒன்றின் மூலம் ஏழை, எளியவர்களில் திறமை மிக்கவர்களை தத்தெடுப்பது, அல்லது கல்வி உதவித்தொகை வழங்கி தொழிற்படிப்புகளை பெற உதவுவது. அதிரை பைத்துல்மாலில் கல்வி உதவிக்காக ஒரு நிதியை நிரந்தரமாக ஏற்படுத்துவது அவசியம்.

தற்பொழுது மிகக் குறைந்த அளவுக்கு கல்விக்கட்டணம் செலுத்தப்படுகிறது. அதுவும் சீருடைகளை தைத்து தருவதின் மூலம் கிடைக்கும் நிதியை கல்விக்கட்டணமாக, இலவச சீருடையாக வழங்குகின்றோம்.

கல்வி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், மாணவ, மாணவிகள் நன்றாக படிக்கின்ற சூழலில் போதிய உதவிகளை வழங்கினால் அவர்கள் நன்றாக படிப்பார்கள். அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும்.

எனவே, கல்விக்கு உதவி செய்ய எண்ணம் உள்ள சகோதரர்கள் பொருள் உதவி செய்தால், ஒரு நிதியை உருவாக்கி, ஒவ்வொரு வருடமும் யாருக்கு, எந்த தெருவில் உள்ளவர்களுக்கு, எவ்வளவு தொகை என்பதற்கான பட்டியலை வெளியிடுகின்றோம். தாங்கள் விரும்பும் மாணவ, மாணவிகளுக்கும் உதவிட தயாராக உள்ளோம். தயவு செய்து ஆதரவு தாருங்கள்.

இலவச சீருடைத்திட்டம்

நமதூர் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சீருடை அணிகிறார்கள். நிர்வாகம் வழங்கும் பொழுது அந்தத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்தை, அந்தந்தப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சீருடை வழங்கப்படுகிறது, கல்விக்கட்டணம் கட்டப்படுகிறது. உதவி பெறும் மாணவ, மாணவிகளின் வீட்டில

1. TV/Cable இருக்கக்கூடாது.

2. ரூ.250க்கு மேல் EB பில் கட்டப்பட்டிருக்கக்கூடாது.

3. வெளிநாட்டு உதவிகள் இருக்கூடாது.

4. டெலிபோன் வசதி இருக்கக்கூடாது.

நேரடி விசராணை செய்யும் குழுவினரின் பரிந்துரையின் பேரில் உதவிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் ரூ.40000-க்கு குறையாமால் உதவி செய்யப்படுகிறது. இலவச சீருடை வழங்கும் பொறுப்பை நமதூர் சகோதரர்கள் ஒரு சிலர் இணைந்து ஏற்கலாம்.
Advt. here


©2005 adiraibaithulmal.com. All Rights Reserved.
Hosted by Adirai Baithulmal, Developed by A.H. Mohamed Saleem & T. Ahamed Hamza