ஜக்காத் விநியோகம் ஒரு மிகச்சிறந்த பொருளாதாரத்திட்டம். இறைவனால் வழங்கப்பட்டுள்ள அருட்கொடை. பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்கவும், ஏழ்மை, வறுமை, பொருளின்மையின்மை, இயலாமை காரணமாக சிரமப்படும் மக்களுக்கு கண்ணியமான முறையில் (அவர்களது தன்மான உணர்வும், கொவ்ரவமும் பாதிக்கப்படாத வகையில்) நோரடியாகவும் (அவர்கள் ஏற்றுக்கொண்டால்) மறைமுகமாகவும் சிறிய தொகையாக, உதவியாக, பெருந்தொகையாக (அவர்களது தேவை நிறைவேறும் வகையில்) ஜக்காத் வழங்கப்படுகிறது.
மார்க்க உணர்வும், ஈடுபாடும், செயல்பாடும் மிக்க நமதூர்வாசிகள் தாங்கள் வழங்கும் ஜக்காத் தொகையில் ஒரு பகுதியை வழங்கினால் கணிசமான தொகை நம்மிடம் சேரும். அதைக்கொண்டு நிறைய உதவிகளைச் செய்ய முடியும். வட்டியை ஒழிக்க இது மிகவும் உதவும்.
அன்பிற்குரிய சகோதரர்களே! தாங்களும் தங்களது குடும்பத்தினரும், உறவினர்களும், நமதூர்காரர்களும் அதிரை பைத்துல்மாலிடம் கணிசமான ஜக்காத் நிதியை வழங்கிட ஏற்பாடு செய்யுங்கள். உண்மையில் நோரடியாகவும், மறைமுகமாகவும், உரிய விசாரணையின் பேரிலும், உரியவர்களுக்கு உதவி செய்யப்படும். வீண் விரயமாகும் பொருளதாரத்தை (ஜக்காத் நிதியை) நமதூர் மக்களுக்குக் கிடைக்க ஆவன செய்யுங்கள். அதிரை பைத்துல்மாலுக்கு ஆதரவு தாருங்கள். |